சிதம்பரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

சிதம்பரம், ஜூன் 13- சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில், 09-06-2026 அன்று அன்று – முத்தமிழறிஞர் கலைஞர் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக துணைச் செயலாளர் என்.முருகன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட கழகச் செயலாளர் கோவி. பெரியார்தாசன் தலைமையேற்றார்.

மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி. சிலம்பரசன், இளை ஞரணி செயலாளர் மா.பஞ்சநாதன் ஆகியோர் உரையாற்றிய பின்னர், கழக சொற்பொழிவாளரும், மாவட்ட கழகத் தலைவருமான பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் உரையாற்றினார். இறுதியாக கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி கலைஞரின் சிறப்புக்களையும், தொண்டுகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக நகர கழக அமைப் பாளர் இரா.செல்வரத்தினம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கீரப் பாளையம் ஒன்றிய தலைவர் அசோக், தி.மு.க. கவுன்சிலர் வெங்க டேசன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *