காட்டுமன்னார்குடி, ஜூன் 13- சிதம்பரம் மாவட்ட கழக சார்பில், காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் 10.06.2026 அன்று மாலை 6.30 மணிக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் நகர தலைவர் பொன்.பஞ்சநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தருமர்.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அ.முத்துசாமி, காட்டுமன்னார்குடி பேரூராட்சித் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி, கழக சொற்பொழிவாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் பேசிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் இரா.செல்வ கணபதி, திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, திருமுட்டம் ஒன்றிய செயலாளர் இரா.இராசசேகரன், பெரியார் பெருந்தொண்டர் சுந்தரமூர்த்தி, தி.மு.க.அவைத் தலைவர் கருணாநிதி, நகர தி.மு.க. பொருளாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இறுதியாக, ஒன்றிய கழக அமைப் பாளர் கீழ்க்கடம்பூர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
