பா.ஜ.க. ஆளும் அரியானாவில் தாழ்த்தப்பட்ட இளைஞர்மீது கொடூரத் தாக்குதல் கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சண்டிகர், ஜூன் 9  பாஜக ஆளும் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் ஹான்சி தாலுகா விலுள்ள சோர்கி கிராமத்தில், மோட்டார் திருடியதாகக் குற்றம்சாட்டி (போலிக் குற்றச் சாட்டு என்று கூறப்படுகிறது) தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரின் கால்களைக் கட்டி, கிணற்றுக்குள் தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப் பட்ட இளைஞரின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிஅய்டியு மாநில பொதுச்செயலாளருமான ஜெய்பகவான், சிபிஎம் மூத்த தலைவர் சத்வீர் சிங், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சவிதா ஆகியோர் சோர்கி கிராமத்திற்குச் சென்றனர். குடும்பத்தினருடன் உரை யாற்றிய பின்பு இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளை ஞருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் சிபிஎம் தூதுக்குழு அரியானா பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சகுந்தலா ஜாகர், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ரோஹ்தாஸ் ராஜ்லி, சிஅய்டியு தலைவர் மனோஜ் சோனி ஆகியோர் ஹான்சி அரசு சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப் பட்ட இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *