ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்

2 Min Read

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு
மாணவர்கள் நலனை காக்க போர்க்கால அடிப்படையில் தீர்வு

மதுரை, ஜூன் 8- ஒன்றிய அரசின் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஆன்லைன் மூலம் விடைத்தாள் திருத்துதல்) OSM தளத்தில் உள்ள கடுமையான தொழில்நுட்பக் குறைபாடுகள், மாணவர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக கடி தத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: “19 வயதுடைய நெறிமுறை ஹேக்கர் (Ethical Hacker) நிசர்கா அதிகாரி என்பவர், சிபிஎஸ்இ-இன் விடைத்தாள் மதிப்பீட்டுத் தளத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு ஓட் டைகளை சமீபத்தில் அம்பலப்படுத்தி யுள்ளார். இது பல இலட்சம் மாணவர் கள் மற்றும் அவர்களின் பெற்றோர் களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முதல்வர்களின் டேஷ்போர்டு களில் இருந்த, மாணவர்களின் விடைத் தாள்கள் உள்ளிட்ட சுமார் 93 லட்சம் தரவு வரிசைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளன. இவற்றை மிக எளிதாகச் சிதைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சாத்தியக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) சேமிப்பகத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக, 2026ஆம் ஆண்டின் விடைத்தாள்கள், வினாத்தாள் களை அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ள வர்கள் கூட, ஓடிபி அங்கீகார த்தைத் தவிர்த்து விட்டு (Bypa ssing OTP) அணுகும் நிலை இருந்துள்ளது.

நிர்வாகத்தின் அலட்சியம்

இந்த விவகாரம் முதலில் வெளி வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி கள் இக்குறைபாடுகளை மூடிமறை க்கவே முயன்றனர். பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகே தவறு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த குளறுபடிகளால் அதிருப்தியடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், விண்ணப்ப விண்டோ திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 56,000-க்கும் மேற்பட்டோர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக தேர்வெழுதிய மாணவர்களில் கிட்டத் தட்ட 23% பேர் (4,04,319 மாணவர்கள்)தங்களின் விடைத்தாள் நகல்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளது, வாரியத் தின் மீதான நம்பகத்தன்மை சரிந் துள்ளதைக் காட்டுகிறது.

விசாரணையில் உள்ள குறைகள்

இந்த விவகாரம் தொடர்பாகச் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதுடன், அமைச்சரவை செயலகம் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனினும், இந்த விசாரணையின் வரம்புகள் மிகவும் குறுகியதாக இருப்பதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அய்ஏஎஸ் அதிகாரி ஒருவரை மட்டுமே கொண்டு விசாரணையை நடத்துவது போதாது என்றும், தொழில்நுட்பக் குளறுபடிகளை ஆராய இணையப் பாதுகாப்பு நிபுணர்களை ஏன் குழுவில் சேர்க்க வில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

உயர் கல்விச் சேர்க்கைக்கான கால அவகாசம் நெருங்கி வருவதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான நிலை அறி க்கையை முழுமையான வெளிப்படை த்தன்மையுடன் பொதுவெளியில் வெளியிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது டன், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படை யில் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சு.வெங்க டேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து இந்தக் கடிதத்திற்கு,“மேலதிக விசாரணைக்காக வும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும்” ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி.,கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *