நன்கொடை

ராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் ந.இராமு-உஷாராணி இணையரின் மூத்த மகள் தமிழினி-வினோத் இணையரின் மூத்த மகன் வி.மதன் கார்த்திக் நான்காம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (6.6.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

– – – – –

நன்கொடை

முனைவர் கி.சுவாமிநாதன் (ஓய்வு, முதன்மைக் கல்வி அலுவலர்) மேனாள் கூடுதல் பதிவாளர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (5.6.2026) ரூ.7500 நாகம்மையார் குழந்தைகள் இல்ல உணவிற்காக வழங்கப் பட்டது. வாழ்த்துகள்!

– – – – –

நன்கொடை

திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய கழகத் தலைவரும், விடுதலை முகவருமான இரா.தமிழ்ச்சுடரின் வாழ்விணையர் வி.அம்மணி அவர்களின் 79 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *