‘அந்தோ பரிதாபம்!’ கடவுள் காப்பாற்றவில்லையே! தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாமக்கல், ஜூன் 1 ​திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் கோயில் தேரோட்​டத்​தின்​போது தேர் சக்​கரத்​தில் சிக்கி கல்​லூரி மாணவர் உயி​ரிழந்​தார். மற்​றொருவர் காயமடைந்தார்.

நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர்  மலைக்​கோயி​லில் வைகாசி தேர்த்​திரு​விழா தேரோட்​டம் நேற்று (31.5.2026) நடை​பெற்​றது. அப்​போது, எதிர்​பா​ராத​வித​மாக தேர் நின்ற இடத்​தில் உள்ள சுவர் மற்​றும் தேர் சக்​கரத்​தின் இடையே இரு இளைஞர்​கள் சிக்கி நசுங்​கினர். அவர்​களை பக்​தர்​கள் மீட்​டு, திருச்​செங்​கோடு மருத்​து​வ​மனைக்கும் பின்​னர் சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கும் அனுப்பினர்.

இதில் திருச்​செங்​கோடு கூட்​டப்​பள்​ளியைச் சேர்ந்த தனி​யார் கல்​லூரி மாணவர் ஹர்​ஷவர்​தன் (20) சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்தார். இவரது நண்​ப​ர் வாலரைகேட் பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவர் சஷ்டிகன் இடுப்பு எலும்பு முறிவு ஏற்​பட்டு கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டார். இதுதொடர்​பாக திருச்​செங்​கோடு காவல்துறையினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இக்​கோயி​லில் 450 ஆண்​டு​களாக பழைமை​யான தேர் உலா வந்த நிலை​யில், ரூ.2.17 கோடி​யில் புதிய தேர் கட்​டப்​பட்டு 3 மாதங்​களுக்கு முன்​னர் வெள்​ளோட்​டம் நடை​பெற்று முதல்​முறை​யாக நேற்று (31.5.2026)தான் தேரோட்​டம் நடந்​தது. இதனிடையே உயி​ரிழந்த இளைஞரின் குடும்​பத்​தினரைச் சந்​தித்து அமைச்​சர்​கள் அருண்​ராஜ், லோகேஷ் தமிழ்ச்​செல்​வன், தமிழன் பார்த்​திபன் ஆகியோர் ஆறு​தல் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *