பட்டியல் இட்டால் பக்கங்கள் போதாது
கொட்டிலில் கிடந்த தமிழினம் இன்று
கொட்டகைகள் போட்டுக் கூட்டங்கள்
பட்டியல் இனமாக வாழ்ந்தவர்கள் இன்று
பட்டிணம் ஆளும் மகிமை என்ன?
பெரியார் அவர் வழி வந்த ஆசிரியப் படை
படைத்திட்ட வெற்றிகள் பல கண்டாய்
தமிழர் தலைவர் “ஆசிரியர்’’ மகுடம் சூட்டி
இந்திய மண்ணிற்கே பாடம் சொன்னாய்!
விடுதலை கிடைத்து ஜாதி ஒழிந்திட
“விடுதலை” வேண்டும் வாழ்த்திடுவோம்!
– சோம. இளங்கோவன் (அமெரிக்கா)
