இன்போசிஸ் சிஇஓ ஊதியம் ரூ. 82.6 கோடியாக உயர்வு!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, மே 31 நாட்டின் 2-ஆவது பெரிய அய்டி நிறுவனமான இன்ஃபோசிஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக்கின் ஆண்டு ஊதி யம் 2026-ஆம் நிதியாண்டில் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.82.6 கோடியை எட்டியுள்ளது. அவர் ஊதியமாக ரூ.7.97 கோடியும், போனஸாக ரூ.23.35 கோடி யும் பெற்றார். இந்த ஆண்டுக் கான அவரது மொத்த வருவா யில், பரேக் தனது பங்குகள் மூலம் மிகப் பெரிய தொகை யாக ரூ.50.75 கோடியை பெற் றுள்ளார். 2026 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் 3.1 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2027 நிதியாண்டில் 1.5 முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சலில் பரேக்கின் 5 ஆண்டு பதவிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அவரது பதவி நீட்டிக்கப்படுமா என்பது பற்றி இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 31 தமிழ்நாடு திருச்சி, திரு வண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று (31.5.2026) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சத்தீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு காற் றழுத்த தாழ்வுப்பாதை நிலவு கிறது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகு திகளின் மேல் சுமார் 1.5 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற் றும் அதனை ஒட்டிய பகுதி களின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இவற்றின் காரணமாக இன்று (மே 31) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின் னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 1, 2 தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்களில் (விழுப்புரம் நீங்கலாக) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் நேற்று (30.5.2026) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக கிருஷ்ணகிரியில் 8 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ஈரோடு மாவட்டம் அம் மாபேட்டை, கோவை மாவட்டம் தோலம் பாளையத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில்
5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

சென்னை, மே.31- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி ஓய்வு வயது 60 ஆக உள்ளது. 60 வயதை நிறைவு செய்பவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். வழக்கமாக ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி 8,144 பேர் ஓய்வு பெற்றனர். இந்த மே மாதம் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள்.

தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. ஓய்வூதி யர்களை பொறுத்தவரை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் 1.98 லட்சம் பேரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 6.24 லட்சம் பேரும் இருக்கிறனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *