மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! சி.பி.எம். வலியுறுத்தல்!

தஞ்சாவூர், மே 30– அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று (29.5.2026) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறிய தாவது:

காவிரி சம்பந்தப்பட்ட விவகாரங்களில், தொடர் புடைய 4 மாநிலங்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளையோ அல்லது புதிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியாது.

ஆனால், அதை மீறி கருநாடக அரசு மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிப்பது, பூமி பூஜை போடுவது, அணையை கட்டியே தீருவோம் என்று சவால் விடுவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லுறவைக் கெடுக்கும். கருநாடக அரசு தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதனை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது.

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் உரிமைகள் சார்ந்த இந்த விவகாரத்தில் எந்தவித சமரசமும் இன்றி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

காவிரியைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்கக் கூடாது: சி.பி.அய். வீரபாண்டியன்

இதேபோல், தஞ்சையில் நேற்று (29.5.2026) செய்தியாளர் களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், “காவிரியின் உரிமை என்பது எங்கள் வாழ்வோடும், வளத்தோடும், உயிரோடும் கலந்துள்ளது. அதனை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், கருநாடகமும் தமிழ்நாடும் பாதிக்காத வகையில், ஏற்கெனவே காட்டப்பட்ட வழிகாட்டு தல்களின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண் டும் என்றும், தமிழ்நாடு அரசு முந்தைய ஆட்சியா ளர்கள் பின்பற்றிய நடவடிக் கைகளைத் தொடர்ந்து பின்பற்றி, தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *