வேகமாகப் பரவும் ‘எபோலா’ வைரஸ் 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை

2 Min Read

கின்ஷாஷா, மே 27- காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இது ஒரு தீவிரமான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த வைரஸ் உள்ளவர்களின் ரத்தம், வியர்வை, விந்து போன்ற உடல் திரவங்கள் வாயி லாக மற்றவர்களுக்கு பரவு கிறது.

தற்போது பரவி வரு வது ‘புண்டிபுக்யோ’ எனப்படும் உருமாறிய எபோலா வைரஸ் ஆகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப் பூசியோ, மருந்துகளோ எதுவும் இல்லை. நிலை மையின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இதை உலக ளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறி வித்துள்ளது.

காங்கோவின் அண்டை நாடுகளான அங்கோலா, புருண்டி, எத்தியோப்பியா, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், தான்சானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு எபோலா பரவும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க உடனடி மற்றும் ஒருங்கிணைந்த பன் னாட்டு நடவடிக்கை தேவை என்று உலக சுகாதார அமைப்பு வலி யுறுத்தியுள்ளது.

எபோலா பரவல் அச்சம் காரணமாக, 4ஆவது இந்திய-ஆப்பிரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாட்டை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

மேலும் விமான நிலை யங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எபோலா பாதிப்புள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணியர் அல்லது அந்த நாடுகள் வழியாகப் பயணித்து இந்தியா வருபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற் பட்டால், அவர்கள் உட னடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத் தரவிடப்பட்டுள்ளது.

900-அய் கடந்தது பாதிப்பு

கிழக்கு காங்கோவின், இடூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 900-அய் கடந்துள்ளது. காங்கோ தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, எபோலா அறிகுறியுடன் 904 பேரும் பாதிக்கப்பட்டவர்களில், 119 பேர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *