பா.ஜ.க. கவுன்சிலர் வீட்டில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

மார்த்தாண்டம், மே 27 குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14-ஆவது வார்டு பாஜக கவுன்சிலராக உள்ளார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமாக பெட்டிக்கடை, பாறை உடைக்கும் வாகனம், கிணறு தோண்டும் வாகனம் உள்ளது. இந்தநிலையில், அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களியக்காவிளை காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டிற்கு சென்று காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டின் பின்னால் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கவுன்சிலர் குணசீலன் மற்றும் வெடி பொருட்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதியை சேர்ந்த ராஜன் (75) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

 

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும்

 ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

சென்னை, மே 27 பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வற்புறுத்தி ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள படி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கனவான பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.8.2010க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (டெட் தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகுபாடு இன்றி

அனைத்து விவசாயிகளின்
பயிர்க் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 27 பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாடு அரசு விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை  25.5.2026 அன்று தள்ளுபடி செய்துள்ளது. இதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ததை தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்து அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *