மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை 2 மாதங்களில் தீர்ப்பு! கனிமொழி எம்.பி. வரவேற்பு

சென்னை, மே 26- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்ற வாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த நிலையில் 76 நாட்களில் வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்று தந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரி களுக்கும் நன்றி.

குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது.

இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதி செய்ய வேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *