லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து உயிர் தப்பிய மேஜர் ஜெனரல்

1 Min Read

புதுடில்லி, மே 25- லடாக்கின் லே பகுதியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், மேஜர் ஜெனரல் உட்பட மூன்று இந்திய ராணுவ அதிகாரிகள் நல்வாய்ப்பாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

மலைப்பகுதியில் நேர்ந்த விபத்து

கடந்த மே 20 அன்று, லடாக்கின் லே அருகே உள்ள மலைப்பாங்கான டாங்ஸ்டே (Tangste) பகுதியில் ராணுவத்திற்குச் சொந்தமான ‘சீட்டா’ (Cheetah) ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த ஹெலிகாப்டரை லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜர் ஆகியோர் இயக்கி வந்தனர். இதில் 3ஆவது காலாட்படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா பயணியாகப் பயணம் செய்தார்.மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்தது. எனினும், நல்வாய்ப்பாக ஹெலிகாப்டரில் இருந்த மூன்று அதிகாரிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

நெகிழ்ச்சிப் பின்னணி: விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, கடுமையான சூழலிலும் தங்களின் மன தைரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் ஒரு தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டனர். விபத்துக்குள்ளாகி சிதைந்து கிடக்கும் ஹெலிகாப்டரின் அருகே உள்ள பாறைகளில், மேஜர் ஜெனரல் சச்சின் மேத்தா மற்ற இரு அதிகாரிகளுடன் அமர்ந்திருக்கும் அந்தப் படம், ராணுவ வீரர்களின் அசாத்திய துணிச்சலைக் காட்டுவதாக நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *