இனிவரும் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டி! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை. மே 23- சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.

இதில், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகப்பட்டினம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்த திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் மற்றும் தமுமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தலைமை நிர்வாக குழு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு வாழ்த்துகளை இந்நிர்வாக குழு தெரிவிக்கிறது. புதியதாக ஆட்சி பொறுப்பேற் றுள்ள தவெக அரசு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டுமென்றும் முந்தைய திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை தொடர வேண்டுமென்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டுமென்றும் இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.

மனிதநேய மக்கள் கட்சி இனி வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதென்று தீர்மானிக்கபட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *