பெருமளவு கடன் வழங்குவதில் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை காட்டும் வங்கிகள் சாமானியர்களுக்குக் கெடுபிடி செய்வதா?

1 Min Read

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

புதுடில்லி, மே 23 பெரிய நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும் போது அலட்சியமாகச் செயல்படும் வங்கிகள், சாதாரண மக்கள் சிறிய கடன்களைப் பெற முயன்றால் அவர்களிடம் கடுமையான நிபந்தனைகளை விதித்துக் கெடுபிடி செய்வதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

நிறுவனம் ஒன்றின் சொத்துக்க ளை பாரத ஸ்டேட் வங்கி (SBI) பறிமுதல் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்கிகளின் இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டி அதிருப்தி வெளியிட்டனர்.

நீதிபதிகள் வெளியிட்ட முக்கிய  கருத்துகள் வருமாறு:

விதிமுறைகளில் அலட்சியம்

பெரிய நிறுவனங்களுக்குப் பெரு மளவு கடன்களை வழங்கும் போது, வங்கிகள் அந்நிறுவனங்களுக்கு அதிக சிரமத்தை தராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றன.

சாமானியர்களுக்குத் தொந்தரவு

ஆனால், தனிப்பட்ட தேவைகளுக் காகச் சிறிய கடன்களைப் பெறும் சாதா ரண மக்களுக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில நேரங்களில், இது எல்லை மீறிய தொந்தரவாகக் கூட மாறுகிறது.

எளிமையான நடைமுறை அவசியம்

கடன் வழங்குவதற்கான விதி முறைகளைத் தளர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. எனினும், சாமானியர்கள் கடன் பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண் டும்.

“இந்த குறிப்பிட்ட வழக்கில், 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை வழங்கியதில் எஸ்.பி.அய். மற்றும் அதன் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர். கடன் பெற்ற நிறுவனத்தால் முதல் தவணையைக் கூடத் தொடங்க முடியவில்லை. கடன் பெறுபவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை அதிகாரிகள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அதில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *