திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த பா.ஜ.க. பிரமுகர்

புதுடெல்லி, மே 22 திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சயோனி கோஷின் தலைக்கு, உ.பி. பாஜக நகராட்சி தலைவர் ரூ.1.கோடி பரிசு அறிவித்த காட்சிப் பதிவு சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

சிவலிங்கம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சயோனி சமூக ஊடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்திருந்த சயோனி கோஷ், தனது சமூக ஊடக கணக்கு ஹேக் செய்யப்பட்டு, தவறான கருத்து வெளியிடப்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய அந்த கருத்து உடனே நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் அத்துடன் முடிவடையவில்லை.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, சயோனி கோஷின் கருத்து சமூக ஊடகத்தில் மீண்டும் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உ.பி. புலந்த்சாகர் மாவட்டத்தின் சிகந்திரபாத்தில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக நகராட்சி தலைவர் பிரதீப் தீக்சித் கூறுகையில், ‘‘சயோனி கோஷின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்’’ என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சயோனி கோஷ் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவைத் தலைவர் ஆகியோரை இணைத்து வெளியிட்ட பதிவில், “தேர்தலின்போது பெண்களின் பாதுகாப்பை மிகப் பெரிய விஷயமாக பாஜக பேசியது.

ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதி ஒருவருக்கே பாஜக தலைவர் வெளிப் படையாக அச்சுறுத்தல் விடுக்கிறார். இதுதான் ஒன்றிய அரசின் பெண்கள் மேம்பாட்டு கொள்கையா ? பிரதீப் தீக்சித் மீது கொல்கத்தா மற்றும் உ.பி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *