‘விடுதலை’ முன்னாள் மேலாளர் நாகரசம்பட்டி N.S.சம்பந்தம் அவர்களது துணைவியார் திருமதி கமலா சம்பந்தம் (வயது 95) நேற்று (21.5.2026) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
இன்று (22.5.2026) காலை 9 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்ற கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அவரது மகள்கள், மருமகன்கள் மற்றும் உறவினர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
கழகத் தலைவருடன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தங்கமணி, தங்க.தனலட்சுமி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர்
சோ.சுரேஷ் மற்றும் தோழர்கள் சென்றனர்.
