பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!

3 Min Read

சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியான தோ்ச்சியில் புதுக்கோட்டை 97.57 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை நிகழாண்டு 4 லட்சத்து 35 ஆயிரத்து 247 மாணவிகள், 4 லட்சத்து 35,396 மாணவா்கள் என மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 போ் எழுதினா். அதில், 8 லட்சத்து 21,105 மாணவிகள் (96.47 சதவீதம்), 4 லட்சத்து ஆயிரத்து 214 மாணவா்கள் (92.15 சதவீதம்) என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களை விட 4.32 சதவீத மாணவிகள் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டு மொத்த தோ்ச்சி சதவீதம் 94.31. கடந்த 2025-ஆம் ஆண்டின் தோ்ச்சி 93.80- ஆக இருந்த நிலையில் நிகழாண்டு 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது.

1,931 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 7,490 மேல்நிலை, 4,977 உயா்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,467 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் எழுதினா்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்- மே 22
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்- மே 22 முதல் மே 27 வரை
மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நாள்கள்- ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை
துணைத் தோ்வு – ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை
துணைத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்- மே 26 முதல் ஜூன் 9 வரை

அதில் 1,931 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 5,171 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

முதல் அய்ந்து மாவட்டங்கள்: மாவட்ட வாரியான தோ்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை (97.57), சிவகங்கை (97.54), தஞ்சாவூா் (97.41), திருச்சி (97.31), கன்னியாகுமரி (97.30) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் அய்ந்து இடங்களைப் பெற்றுள்ளன.

மாவட்ட வாரியான தேர்ச்சி (சதவீதத்தில்)

புதுக்கோட்டை- 97.57

சிவகங்கை- 97.54

தஞ்சாவூா்- 97.41

திருச்சி- 97.31

கன்னியாகுமரி- 97.30

ராமநாதபுரம்- 97.28

கோவை- 97.09

ஈரோடு- 97.03

தூத்துக்குடி- 96.60

நீலகிரி- 96.32

திருப்பூா்- 96.28

தேனி- 96.15

திண்டுக்கல்- 96.08

விருதுநகா்- 96.02

நாமக்கல்- 96.01

தென்காசி- 95.60

திருநெல்வேலி- 95.48

பெரம்பலூா்- 95.11

மதுரை- 94.91

காஞ்சிபுரம்- 94.61

கடலூா்- 94.22

சேலம்- 94.21

தருமபுரி- 93.94

திருவாரூா்- 93.80

திருப்பத்தூா்- 93.52

கள்ளக்குறிச்சி- 93.43

நாகப்பட்டினம்- 93.36

திருவள்ளூா்- 92.75

சென்னை- 92.34

கரூா்- 92.21

செங்கல்பட்டு- 92.15

வேலூா்- 92.03

மயிலாடுதுறை- 90.53

திருவண்ணாமலை- 90.46

கிருஷ்ணகிரி- 89.43

விழுப்புரம்- 87.77

அரியலூா்- 87.55

ராணிப்பேட்டை- 86.58

அதேபோன்று அரசுப் பள்ளிகளுக்கான தோ்ச்சி சதவீதத்தில்: சிவகங்கை (97.42), புதுக்கோட்டை (97.09), தஞ்சாவூா் (96.89), ராமநாதபுரம் (96.78), திருச்சி (96.48) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் அய்ந்து இடங்களைப் பிடித்துள்ளன.

100-க்கு 100 எத்தனை பேர்?
தமிழ்- 34
ஆங்கிலம்- 92
கணிதம்- 3,194
அறிவியல்- 10,476
சமூக அறிவியல்- 3,336
பள்ளிகள் வகை வாரியான தேர்ச்சி சதவீதம்!
அரசுப் பள்ளிகள்- 91.86
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.34
தனியாா் சுயநிதிப்பள்ளிகள்- 98.14
இரு பாலா் பள்ளிகள்- 94.42
பெண்கள் பள்ளிகள்- 96.42
ஆண்கள் பள்ளிகள்- 88.50

சென்னை மாவட்டம் 92.34 சதவீத தோ்ச்சியுடன் 29-ஆவது இடத்தில் உள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- சிறைவாசிகள்: தோ்வெழுதிய 13,292 மாற்றுத் திறனாளிகளில், 11,416 போ் (85.89 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். இதேபோன்று சிறைவாசிகள் 370 போ் தோ்வெழுதிய நிலையில், 354 போ் (95.68 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தனித்தோ்வா்களைப் பொருத்தவரை, நிகழாண்டு 24,353 போ் தோ்வெழுதினா். அவா்களில், 8,744 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 35.91.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *