தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கடலூர் கழக நிகழ்வின் அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தோழர்களுடன் சென்று நேரில் சந்தித்து வழங்கி, நிகழ்வில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். அவரும் அவசியம் நிகழ்வில் பங்கேற்கிறேன். ஆசிரியரை நலம் நாடியதாக கூறுங்கள். இந்த வயதிலும் இவரைப் போல் கடுமையாக உழைக்கிற தலைவரை பார்க்க முடியாது என்று பாராட்டினார். கழகப் பொதுச் செயலாளர் உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நெடுமாறன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வீரசுந்தரம் ஆகியோர் சென்றிருந்தனர். (கீரப்பாளையம், 27.3.2023).
கடலூரில் சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண நிறைவு விழா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
