கூடங்குளத்தில் உள்ள இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
‘ஸ்டைபன்ட்ரி டிரைனி’ பிரிவில் பிளான்ட் ஆப்பரேட்டர் 136, எலக்ட்ரீ சியன் 47, பிட்டர் 30, எலக்ட்ரானிக் 15, இன்ஸ்ட்ரூ மென்டேசன் 15, டர்னர் 5, மெஷினிஸ்ட் 5 உட்பட மொத்தம் 266 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2, அய்.டி.அய்.,
வயது: 18-24 (29.6.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 29.6.2026
விவரங்களுக்கு: npcilcareers.co.in
