பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆவது நூல் மதிப்புரைக் கூட்டம் நேரடி நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில்
23–5-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கின்றது. திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இதுவரை காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டங்கள் இப்போது நேரடியாக நடைபெறவிருப்பதால், நம்முடைய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் நேரடியாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அன்புடன்
முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர்,
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் &
பாவலர் சுப.முருகானந்தம்,
மாநிலச் செயலாளர்கள்
மற்றும் மாநில நிர்வாகிகள்,
செயற்குழு உறுப்பினர்கள்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
