டோக்கியோ, மே 19- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவர், அங்குள்ள கடுமையான குடியேற்ற விதிகள் மற்றும் அவரது மதவாதப் பதிவுகள் காரணமாக விசா புதுப்பிக்கப்படாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப் பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவ செயல்பாடுகள் குறித்தும், இந்தியாவில் சிறு பான்மையினர் மீதான வன்முறை நிகழ்வுகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது ஜப்பானில் வசிக்கும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர்கள் இது குறித்து அந்நாட்டு அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றனர். ஜப்பானில் பவுத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடு, இந்தியாவில் இருந்து சென்ற இந்துக்களும் வசித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அங்குள்ள சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் மணீஷ் குமார் பதி விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிர்வாகம் ஏற்கெனவே மணீஷ் குமாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், “இது எனது கடமை, இந்துக்களின் பாதுகாப்பிற்காகவே இதைச் செய்கிறேன்” என்று கூறி, அவர் தொடர்ந்து அத்தகைய கருத்துகளைப் பகிர்ந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் விளைவாக, ஜப்பானிய அரசு அவரது விசாவை புதுப்பிக்க மறுத்து, அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடி உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மணீஷ் குமார் கண்ணீருடன் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்:
“ஜப்பானில் பிறந்து வளர்ந்த என் பிள்ளைகளுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும். இங்குள்ள வசதிகள் இந்தியாவில் இல்லை. அங்கு சென்றால் எங்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்றே தெரியவில்லை. எங்களை இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லச் சொல்கிறார்கள், நான் இப்போது என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த நிலைக்கு இந்தியாவில் உள்ள பலர் சமூக வலைதளங்களில் தங் களது ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று சமீபகாலமாக வளைகுடா நாடுகளிலும் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பதிவிடு பவர்கள் தொடர்ந்து கண்டறியப் பட்டு, நாட்டை விட்டு வெளியேற் றப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களை நம்பியுள்ள குடும் பங்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ளவர்கள் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது அரசியல் காரணங் களுக்காகவோ பதிவிடும் மதவாதக் கருத்துகள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ் வாதாரத்தைப் பறிக்கும் ஆயுதமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த ஜப்பான் நிகழ்வு ஒரு முக்கிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
