பார்ப்பானுடைய அடிமையாக இருக்கின்ற மடமை மிக்க தமிழர்களை, மானமில்லாமல் இருந்து வந்த தமிழனை, நம் தாய்மார்களை மடமையிலிருந்து மீளச் செய்வதும், அவர்களைச் சிந்திக்க வைத்து முன்னேறச் செய்வதும்தான் திராவிடர் கழகத்தின் கொள்கை – திட்டம். சொல்லப்போனால் தமிழன் அரசாண்டிருக்கலாம். செல்வந்தனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவன் என்ன நிலையிலிருந்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1972)
Leave a Comment
