முத்தாய்ப்பான பதில் மாணவர் சமர்ப்பித்த பட்டத்தை பெற்றோருக்கே அர்ப்பணிக்கச் சொன்ன தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, மே 17 சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி பல்கலைக் கழகத் தில் எம்.எஸ். (M.S.) பட்டம் பெற்ற தமிழ்நாடு மாணவர் முத்துக்குமார், தனது பட்டத்தை முதலமைச்சரும் திமுக தலைவ ருமான மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப் பிப்பதாக காணொலி வெளி யிட்டிருந்தார். அதற்கு, “இந்தப் பட்டத்தை உங்களது பெற்றோருக்கு சமர்ப்பிப்பதே சரியாக இருக்கும்” என மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி டூ சுவீடன்: சாதித்துக் காட்டிய தென்காசி மாணவர்: தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வளர்ந்தவர் மாணவர் முத்துக்குமார். இவர் தனது கடின உழைப்பால், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல் கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச். (KTH Royal Institute of Technology) பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற போக்குவரத்து (Urban Transit) துறையில் எம்.எஸ். முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

பட்டம் பெற்ற பிறகு சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்ட முத்துக் குமார்: “எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று சுவீடனின் முன்னணி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலி னுக்கு சமர்ப்பிக் கிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

“பெற்றோருக்கு சமர்ப்பி யுங்கள்” – மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சிப் பதில்: மாண வனின் இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைர லானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அம்மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட் டுள்ளார். அதில் அவர் குறிப் பிட்டிருப்பதாவது:

பெற்றோரின் தியாகம்: “எனக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதைவிட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறது தான் சரியா இருக்கும்.”

இளைஞர்களுக்கு வழி காட்டுங்கள்: “உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு வழிகாட்டியாக இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.”

“நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசத்தோடு வாழ்த்தியுள்ளார்.

அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வெளி நாட்டில் சாதனை படைத்த மாணவனின் நன்றி யுணர்வும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள முதிர்ச்சியான, நெகிழ்ச்சி யூட்டும் பதிலும் தற்போது இணையத்தில் பெரும் வரவேற் பைப் பெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *