வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு

வாசிங்டன்,
மே 17- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றிருந்தார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில் “சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவே உலகின் மிக முக்கியமான இருதரப்பு உறவு என்று நாங்கள் இருவரும் நம்புகிறோம். இந்த உறவு சிறப்பாகச் செயல்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஒருபோதும் அதை சீர்குலைத்துவிடக் கூடாது” என்றார்.

அழைப்பு

சீன அதிபரின் சந்திப் போன்போது, வெள்ளை மாளிகைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வருகை தருமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் விடுத்துள்ள அழைப்பில் கூறியிருப்ப தாவது:-

அதிபர் ஷி அவர் களே, இந்த அழகான வரவேற்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் எங்களைப் பார்வையிட வருமாறு உங்களுக்கும், திருமதி பெங் அவர் களுக்கும் அழைப்பு விடுப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

நாங்கள் அந்த வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இப்போது நான் எனது கோப்பையை உயர்த்திப் பிடித்து (உணவு அருந்தும்போது டிரிங்ஸ் கோப்பை), அமெரிக்க மற்றும் சீன மக்களிடையேயான செழுமையான மற்றும் நீடித்த உறவுகளுக்காக வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இது மிகவும் சிறப்பான ஒரு உறவு. மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான நேரமாக அமைந்தது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *