ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தங்களால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘திராவிட ஃபார்முலா’ மீண்டும் தேவைப்படும் அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: “அவசியமும் அவசரமும்” என்று குறிப்பிட்டிருக்கிறீரே, அவசியம் வந்தது;  ஆனால், அதற்குரிய அவசரம் கனியவில்லை. காலம் அடுத்தடுத்து கனிய வைக்கக் கூடும்.

  • • • • •

கேள்வி: மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அமாவாசை அன்று மட்டும் துன்பம் அதிகம் அடைவார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாகச் சமூகத்தில் காணப்படுகின்றதே – உரிய விளக்கம் தருவீர்களா?

– ம.அரசு, புழல், சென்னை

பதில்:அதற்கு அறிவியல்ரீதியாகக் காரணமில்லை. மனோதத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் மூலம் இதுபற்றி விரைவில் நமது ஏட்டில் தெளிவுபடுத்த வைப்போம்.

  • • • • •

கேள்வி: இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்குக் கிடைக்குமா?

– மு.கண்ணன், முண்டியம்பாக்கம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: உடனே (15.5.2026) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வந்து விழுந்துவிட்டதாகச் செய்தி.

  • • • • •

கேள்வி: ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வராததற்கு யார், யார் வருத்தப்பட வேண்டும்?

– க.கண்மணி, சென்னை–14

பதில்: நன்றி மறவாதவர்கள் அனைவரும் வருத்தப்பட வேண்டும்!

  • • • • •

கேள்வி: “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடும்” எதைக் காட்டுகிறது?

– சு.வில்லவன், உடையார்பட்டி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: பண்பாடு மிக்க, தோல்வியிலும் துவளாத, தேர்தல் முடிவு தெரிந்த அடுத்த நாளே நன்றி சொல்ல, தொகுதிக்குச் சென்ற முன்னுதாரணம், வாக்களிக்கத் தவறியவர்களையும் வெட்கப்பட வைக்கத்தக்கது. “வீரச்செயல்” – மலை குலைந்தாலும் மனங் குலையாத மகத்தான போர்த்தளபதி அவரே என்பதை உலகுக்குக் காட்டும்!

  • • • • •

கேள்வி: தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ இன்ஸ்டிடியூசன் அமைப்புகளில் த.வெ.க. தலைவர் ச.ஜோசப் விஜய் கட்சியான த.வெ.க.விற்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று முடிவெடுத்ததாகச் சொல்லப்படுவது உண்மையா?

– பா.செல்வன், திருவள்ளூர்

பதில்: நாமறியோம்; இருக்கக் கூடும் – அப்படியாயினும் அது அதிசயமல்ல!

  • • • • •

கேள்வி: எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் மேலும் பிளவு ஏற்படுமா?

– செ.அப்பு, கன்னியாகுமரி

பதில்:எல்லாம் டில்லியின் சித்து வேலைகளும், திருவிளையாடல்களும், பொம்மலாட்டங்களுமே!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

ஆட்டுக்குட்டித் தன் பாதுகாப்புக்காக ஓநாயிடம் ஒண்டியப் பரிதாப நிலையின் விளைவுகள்!

  • • • • •

கேள்வி: தமிழ்நாடு புதிய சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை சிறப்பானதா, சிந்திக்கத்தக்கதா?

– ம.மணி, செங்கல்பட்டு

பதில்: சிறப்பானதும், சிந்திக்க வைக்க வேண்டியதாக அமைந்த சீரிய உரை!

  • • • • •

கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் பின்புலம் இருக்கிறதா?

– வெ.அங்கையற்கண்ணி, மதுரை

பதில்: அதில்லாமலா? எல்லா வேலைகளுக்கும் மூலாதாரம் அங்கிருந்துதான்! அதுதானே அவர்களது வழமை! வாடிக்கை!!

  • • • • •

கேள்வி: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அதுகுறித்துத் தங்கள் கருத்து?

– கே.எழில், சேலம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில்: முக்கோணப் போட்டியில் இப்போது வென்றுள்ளார். இது நிலைத்து நீடிக்க வேண்டுமே – காங்கிரசின் ‘போஸ்டர்’கள் தொடர்ந்ததைப் பார்த்தால் உண்மை ஒருங்கிணைப்பு யதார்த்தம் எப்படியோ? பரவாயில்லை – சஸ்பெண்ஸ் முடிந்தது!

  • • • • •

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *