அ.தி.மு.க. தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்: சி.வி சண்முகம்

சென்னை, மே 14- சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஒற்றை தலைமையை நாங்கள்தான் கோரினோம். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செய்யும் ஒரே வேலை கட்சியில் இருந்து நீக்குவதுதன்.

எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்தததில் இருந்து தொடர் தோல்விதான். வீடு தேடி வந்த தலைவர்களை நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவர் எடப்பாடி பழனிசாமிஅதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடியே காரணம், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.

“என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்பவரே உண்மையான தலைவர்.

அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வெற்றி பெற்றால் தன்னால் தான் என்பதும் தோற்றால் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கைகாட்டுபவரும் நல்ல தலைவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *