அ.தி.மு.க.வில் குழப்பம்! சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக அறிவிக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது! பேரவைத் தலைவரிடம் பழனிசாமி கோரிக்கை!

சென்னை, மே 13- தன்னை சட்டப்பேரவை அதிமுக தலைவராக அறிவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரவைத் தலைவரிடம் கோரிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது ஆதரவாளர் களுடன், தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரனை நேற்று சந்தித்தார். அப்போது, பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கி, தன்னைத்தான் பேரவை அதிமுக தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி அளித்த கடித்தை ஏற்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை நடத்தி மக்களின் பாராட்டைப் பெற்றவர் பழனிசாமி. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 1.35 கோடி வாக்குகளை பெற்று, கூட்டணியுடன் 53 இடங்கள், தனித்து 47 இடங்களை பழனிசாமி வென்று கொடுத்தார்.

இந்நிலையில், சி.வி.சண்முகம் அவதூறான தகவலை தெரிவித் துள்ளார். பழனிசாமிதான் சட்டப்பேரவை அதிமுக தலைவர் என 47 பேர் கையெழுத்திட்டு உள்ளனர் அந்த கடிதத்தை பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க, பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும். அது தொடர்பாக அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வாக்களிப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *