ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 08.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தலைமை ஏற்று நடத்தினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பி.என்.எம்.பெரியசாமி அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து தலைமை ஏற்ற பொதுச்செயலாளர் வி.மோகன் பகுத்தறிவாளர் கழகத்தினை ஏன் பரவலாக்க வேண்டும்? விரிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? யாரை உறுப்பினராக சேர்த்திட வேண்டும்? உறுப்பினராக சேர்த்த பின் எடுக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் கூறினார்.
உறுப்பினர்கள் சந்திப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், நேர மேலாண்மை பற்றியும் எடுத்துக் கூறினார்.
மாவட்டத் தலைவர், செயலாளர் பொறுப்புகள் என்ன என்பதையும், ஒவ்வொரு உறுப்பினர் முகவரி, அலைபேசி எண் கொண்ட பதிவேடு பராமரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மாதாந்திர கூட்டம் எப்படி நடத்திட வேண்டும், அச்சடிக்கும் துண்டறிக்கைகள் எப்படி இருக்க வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A[H] துண்டறிக்கைகளில் இடம்பெற வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக செயல் பாடுகளில் நாம் ஈடுபடாவிட்டால் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும், நாளை நமது தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டியது பற்றியும், செயல்படாவிட்டால் ஏற்படும் பழி பற்றியும் எடுத்துரைத்து, இது தொடர்பான கருத்துக்களை அனை வரும் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு முடித்தார்.
தொடர்ந்து தங்களது கருத்து களை சிவகிரி அன்பரசன், மேனாள் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் தமிழ்க்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாநகர பொறுப்பாளர் பார்த்திபன், மாநகரத் தலைவர் காமராஜ், கோபி மாவட்டக் காப்பாளர் சிவலிங்கம், குருவை சி.பாலசுப்ரமணியன், சித்தோடு ஆவின் தங்கவேலு, கோபி சாந்தி, பொதுக்குழு உறுப்பினர் சிற்றரசு, மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் நல்லசிவம், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மணிமாறன், நசியனூர் சம்பத், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பி.என்.எம்.பெரியசாமி, பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர் அனிச்சம் கனிமொழி, ஈரோடு திருநாவுக்கரசு, சிவகிரி சண்முகம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் நற்குணன், ஈரோடு அன்பெழில், தண்மதி, சித்தோடு ராஜேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், மூலப்பாளையம் சந்திரசேகரன், ஈரோடு ராஜேந்திர பிரபு, பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் தங்களது கருத்துகளையும் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
இடையே ஆசிரியர் கோபி அருள் புரட்சிக் கவிஞர் பாடல் ஒன்றை பாடி அசத்தினார்.
மருத்துவக் கல்லூரி மேனாள் முதல்வர் மருத்துவர் தமிழ்க்கொடி பகுத்தறிவாளர் கழக கூட்டம் நடத்துவதற்கு ரூபாய் 1000/= நன்கொடை வழங்கினார். அதனை மாநில அமைப்பாளரிடம் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகம் மாநில அமைப்பாளர் கோபி குப்புசாமியிடம் வழங்க அவர் அதை நிகழ்வு இறுதியில் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குருவை பாலசுப்ரமனியன் அவர் களிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அனைவரது கருத்துகளையும் ஒருங்கிணைத்து பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன் ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செய்ய வேண்டியது என்ன என்பதை விரிவாக பேசினார். மாவட்ட செயல்பாடுகளை தீவிரப்படுத்த அமைப்பை மாற்றி அமைத்திட வேண்டியதன் அவசியத்தை கூறினார்.
ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பு கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
மாவட்ட கழகத் தலைவர் – குருவை சி.பாலசுப்ரமணியன்
மாவட்டச் செயலாளர் – சித்தோடு தங்கவேல்
மாவட்ட துணைத் தலைவர் – எம்.சம்பத்
மாவட்ட துணைச்செயலாளர் – ச.சக்திவேல்
ஈரோடு மாநகரத் தலைவர் – மருத்துவர் தமிழ்க்கொடி
ஈரோடு மாநகரச் செயலாளர் – பி.என்.எம்.பெரிய சாமி
ஈரோடு மாவட்டக் காப்பாளர் – அனிச்சம் கனிமொழி
ஈரோடு மாவட்டக் காப்பாளர் – கே.ராஜேந்திர பாபு
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட்டம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் மாநில அமைப்பாளர் கோபி குப்புசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசியதோடு அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவித்து உணவு உண்டு செல்ல வேண்டி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்
கூட்டத்தில் எலவுமலை அசோக்குமார், கவுந்தப்பாடி எஸ்.எஸ்.மாணிக்கம், ரயில்வே குணசேகரன்,ரயில்வே சிவசங்கரன், ஊஞ்சலூர் ராச.ரவி, மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
