வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதுடில்லி, மே 10- வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:

தாய்லாந்தில் உள்ள வவ்வால்களிடம் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ், மனிதர்களைத் தொற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். இந்த வைரஸ் மக்களிடையே பரவி வருவதற்கான ஆதாரம் இல்லை. ஆனாலும், விலங்குகளிடம் பரவும் வைரஸ்களை கண்காணிப்பது முக்கியம்.

இந்த ஆய்வில், வைரஸ் ஏசிஇ2 என்ற மனித உயிரணு புரதங்களுடன் இணையக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். இதன் பொருள் ஒரு பெருந்தொற்று உடனடியாக ஏற்படும் என்பதல்ல, மாறாக இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *