ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.960 கோடி ஊழல் மேனாள் அமைச்சர் கைது

ஜெய்ப்பூர், மே 10 ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்ட, ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில், 960 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தானில், காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் முதலசை்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சராக இருந்தவர் மகேஷ் ஜோஷி.

இவரது துறை கட்டுப்பாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஒன்றிய அரசின், ‘ஜல் ஜீவன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வழக்கு பதிவு

இந்த திட்டத்தை செயல்படுத்த லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை வழங்கியதாக, 2024இல் மகேஷ் ஜோஷி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 960 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மோசடி தொடர்பாக, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும், வழக்கு பதிவு செய்து ஜோஷியை கடந்த ஆண்டு கைது செய்தனர். ஏழு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

இன்ஜினியர்கள் கைது

இதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரியில் மாநிலம் முழுதும் 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 10 இன்ஜினியர்கள் கைது செய்யப் பட்டனர்.

இந்நிலையில், பொறியியல் துறை கூடுதல் தலைமை செயலர் சுபோத் அகர்வால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் (8.5.2026) கைது செய்தனர். இதையடுத்து அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *