தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

1 Min Read

இந்தியாவில் தற்கொலை செய்பவர்கள்
எண்ணிக்கையில் டில்லி முதலிடம்

டில்லி, மே 9- தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 53 பெருநகரங்களில் டில்லி அதிகபட்ச தற்கொலை எண்ணிக்கையைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

தற்கொலைகளின் எண்ணிக்கை: ஓர் ஒப்பீடு

கடந்த 2024-ஆம் ஆண்டில் பதிவான தற்கொலைகளின் அடிப் படையில் முன்னணி நகரங்கள்:

டில்லி: 2,905 உயிரிழப்புகள் (முதலிடம்), பெங்களூரு: 2,403 உயிரிழப்புகள் (இரண்டாமிடம்), மும்பை: 1,406 உயிரிழப்புகள் (மூன்றாமிடம்)

தற்கொலை விகிதத்தை (1 லட்சம் மக்கள் தொகைக்கு) கணக்கிடுகையில், பெங்களூரு 16.7 புள்ளிகளுடன் முதன்மையிலும், டில்லி 13.2 புள்ளிகளுடனும் உள்ளன. இருப்பினும், கடந்த 2022 (3,417) மற்றும் 2023 (3,131) ஆகிய ஆண்டுகளை ஒப்பிடும்போது, டில்லியில் தற்கொலைகளின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும் பாலானோர் திருமணமானவர்கள். இம்முடிவுக்குத் தூண்டும் கார ணங்களாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) பின்வருவனவற்றைப் பட்டியலிடுகிறது:

மிக முக்கியமான குடும்பப் பிரச்சினைகள் காரணமாக உள்ளது.உடல்நலக்குறைவு, போதைப்பொருள் பயன்பாடு, திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள், நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தம், தற்கொலைகள் மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் டில்லி கவலையளிக்கும் சூழலில் உள்ளது.

2024-ஆம் ஆண்டில் பெண் களுக்கு எதிராக 7,827 குற்ற வழக் குகள் பதிவாகியுள்ளன.

இதில் குறிப்பாக 1,058 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதி வாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் நிதி நெருக்கடி, குடும்பச் சிக்கல்கள் மற்றும் மனநலச் சவால்களைக் கையாள முறையான ஆலோசனைகளும் சமூக மாற்றங் களும் அவசியம் என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல! தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்ள உளவியல் நிபுணர்களை நாடுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *