சென்னை, மே 8- ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் சேருவதற்கான வழிகாட்டி கல்வி கண்காட்சி, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் கோவை ஆகிய நகரங்களில் இம்மாதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, தென்னிந்தியா வுக்கான ரஷ்ய துணை தூதர் வலேரி கோட்ஜாவ், சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரும், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மய்யத்தின் இயக்குநருமான அலெக்சாண்டர் டோடோ னோவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று (7.5.2026) கூறியதாவது: ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய அறிவியல், கலாச்சர மய்யம் சார்பில், ரஷ்யாவில் உயர்கல்வியில் சேருவது தொடர்பான வழிகாட்டி கல்வி கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் ரஷ்ய கல்வி கண்காட்சி சென்னையில் மே 9 மற்றும் 10ஆம் தேதியும், மதுரையில் மே 12ஆம் தேதியும், திருச்சியில் மே 13ஆம் தேதியும் சேலத்தில் மே 14ஆம் தேதியும், கோவையில் மே 15ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை யில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மய்யத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி கண்காட்சி நடை பெறுகிறது.
சென்னை மற்றும் இதர நகரங்களில் நடைபெற உள்ள இந்த கல்வி கண்காட்சியில் ரஷ்யாவைச் சேர்ந்த 60 பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன. பொறியியல்,மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கண்காட்சியில் பங் கேற்கலாம். ரஷ்யாவில் கல்வி பயில ரஷ்ய அரசும், பல்கலைக்கழகங்களும் பல்வேறு கல்வி உதவித் தொகை களை வழங்குகின்றன.
குறைந்த கட்டணம்:
தற்போது, ரஷ்யாவில் சுமார் 3.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். ரஷ்ய கல்வி நிறுவனங்களில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் உலக தரத்திலான கல்வி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காட்சி ஒருங்கிணைப்பா ளரும், ஸ்டடி அப்ராட் எஜுகேஷ னல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ரவிச்சந்திரன் கூறும்போது, “ரஷ்ய மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கல்வி கட்டணத்தில் எம்பிபிஎஸ் படிக் கலாம். கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
தமிழ்வழியில் படித்தவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் எனில், 40 சதவீத மதிப்பெண் போதும். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். தமிழ்வழியில் படித்த மாணவர்களும் சேரலாம். ரஷ்ய பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில சிஇடி, அய்இஎல்டிஎஸ் போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் தேவையில்லை” என்றார்.
