ரியாத், மே 8- ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்தி வரும் போரின் பின்னணியில் அரபு நாடுகள் அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றன.
பாதுகாப்பு பிரச்சினை
குறிப்பாக அமெரிக்கா தனது ராணுவத்தின் மூலமாக தங்கள் நாட்டுக்கு முழுமையான பாது காப்பு தரும் என்று இத்தனை ஆண்டு காலம் நம்பி இருந்த அரபு நாடுகள் சமீபத்திய போரில் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ள தாகக் கூறப்படுகிறது.
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் தனது முழுக்கட்டுப்பாட்டை வைத்துள்ள நிலை யில் அப்பகுதி யில் நிறுத்தப்பட்டிருக்கும் நூற் றுக்கணக்கான கப்பல்களை பாதுகாப்பாக அழைத்து வர அமெரிக்கா ஒரு ராணுவ நடவ டிக்கைக்குத் திட்டமிட்டது. அதாவது விடுதலைத் திட்டம் (Project Freedom) என்ற பெயரில் அமெ ரிக்க கப்பற்படைகள் மற்றும் விமானப்படைகள் மூலமாக பாதுகாப்புத் தருவது என்பதே அத்திட்டம்.
இந்த திட்டத்தை அறிவித்த சில நாட்களிலேயே டிரம்ப்பின் அதிலிருந்து பின்வாங்கினார். இந்நிலையில் சவூதி அரேபியாவும், குவைத்தும் டிரம்ப்பின் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இந் நாடுகள் அமெரிக்காவின் படைகள் தங்கள் ராணுவத் தளங்கள், வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அவரை கைவிட்டு விட்டன. அமெ ரிக்கா மீது நம்பிக்கை இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
குறிப்பாக சவூதி அரேபியாவில் அமைந் துள்ள இளவரசர் சுல்தான் விமானத்தளத்திலி ருந்தோ அல்லது சவூதியின் பிற வான்வெளி பகுதிகள் வழியாகவோ அமெரிக்கப் போர் விமா னங்கள் இயக்குவதை அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மான் ஏற்கவில்லை. இதனால், அந்த நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதுடன், கப்பல்களைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு அமைப்பும் அகற்றப்பட்டுள்ளது.
அரபு நாடுகள் அதிருப்தி
சவூதியுடன் கலந்தாலோசிக்கா மலும், அவர்களுக்கு தனது முடிவை தெரியப்படுத்தா மலும் , ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் தன்னிச்சையாக “விடுதலைத் திட்டத்தை” அறி வித்ததால் முகமது பின் சல்மான் அதில் முரண் பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக் காவும் போர் துவங்கியதால் கண்ணுக்குக் கண் என்ற விதத்தில் ஈரானும் பதிலடித் தாக்குதலை தொடுத்து வந்தது. குறிப்பாக மேற்கு ஆசிய நாடு களில் அமெரிக்க ராணுவத்தளங்களை வைத்துக்கொண்டு அந்நாட்டுக்கு ஆதரவாக இருந்து வரும் சவூதி, அமீரகம் உள்ளிட்ட அரபு நாடு களில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தலங்கள் மீது கடும் தாக்குதலையும் ஈரான் நடத்தியது. இந்த தாக்குதல்களின் போது இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் என கொடுத்து உதவிய அமெ ரிக்கா அரபு நாடுகளுக்கு பாது காப்பு கொடுக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அரபு நாடுகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளன என கூறப்படுகிறது.
