பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றச்சாட்டு

1 Min Read

மேற்கு வங்கத் தேர்தல் தோல்வி
மம்தாவுடன் அகிலேஷ் சந்திப்பு!

கொல்கத்தா, மே 8  மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் நேற்று (7.5.2026) நேரில் சந்தித்துப் பேசினார்.

மம்தாவுடன் அகிலேஷ் சந்திப்பு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மம்தா  15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இருப் பினும், ‘இண்டியா’ கூட்டணியை வலுப்படுத்துவதிலும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் மம்தா தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவி லுள்ள மம்தாவின் காளிகாட் இல்லத்திற்குச் சென்ற அகிலேஷ் யாதவ், அவரைச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம்  அகிலேஷ் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்தார்.

ஜனநாயகப் படுகொலை

உத்தரப்பிரதேசத்தில் முன்பு என்ன நடந்ததோ, அதுவே தற்போது மேற்கு வங்கத்திலும் நடந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

மத்தியப் படைகளின் தலையீடு

எதிர்க்கட்சிகளின் தோல்வியை உறுதி செய்ய மத்தியப் பாதுகாப்புப் படைகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பாஜக, தேர்தல் ஆணையம் மற்றும் மாபியா சக்திகள் இணைந்து தேர்தலை நடத்தி, மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித் துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தனது குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான ஒளிப் படங்கள் மற்றும் தரவுகளை அவர் செய்தியாளர்களிடம் ஆதாரமாகக் காண்பித்தார். இந்தச் சந்திப்பு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *