கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு ஆளுநர் கெடு: 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளதால், இன்று பதவி ஏற்பு நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளதால், பதவி ஏற்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணிக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, தலையங்கம்.

* ஹிந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஹிந்தித் தேர்வு; பலத்த எதிர்ப்பின் காரணமாக தேர்வு ரத்து.

* மக்களவையில் ஒவ்வொரு 6 பாஜக எம்பிக்களில் ஒருவர் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, வங்காளம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிஎம்சிறீ திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு புதிய முயற்சி. புதிய அரசுக்கு தொடங்கும் நெருக்கடி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘என்னை அவர்கள் பதவி நீக்கம் செய்யட்டும்’: பாஜக-வின் அமோக வெற்றிக்கு மமதா சவால்; சட்டப் போருக்கு தயாராகிறது திரிணாமுல். பாஜக கட்சியினர் தேர்தலை “கொள்ளையடித்துவிட்டதாக” சட்டமன்ற உறுப்பினர்களிடம் மம்தா குற்றச்சாட்டு.

தி இந்து:

* தவெக எம்.எல்.ஏ.வின் அராஜகம்: வாளால் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய தவெக எம்எல்ஏ: ராயபுரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம். வெற்றி பெற்ற இரண்டே நாளில், அராஜகப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் ஆயுதத்தைக் கையாண்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலரான ஜி.ஜி. சிவா என்பவர், தாமு மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் இணையவழியில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தி டெலிகிராப்:

* மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி: நியூ மார்க்கெட்டில் புல்டோசர், பள்ளிப் பேருந்தில் ‘ஜெய் சிறீ ராம்’ முழக்கம்: தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது இறைச்சிக் கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜகவினர்: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு. அப்பட்டமான ரவுடித்தனமான செயலில், பாஜக ஆதரவாளர்கள் கும்பல் நியூ மார்க்கெட் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டு, கடைகளை இடித்து, திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தியது.

* டெல்லி முதல் இடம்: 2024இல் டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்: தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகள். 2024இல் பாலியல் வன்முறை மற்றும் வரதட்சணை போன்ற குற்றங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தின; வன்புணர்வுக்காக 1,058 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; அறிக்கையின்படி, வரதட்சணைக் கொடுமையால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 109 ஆகவே நீடித்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தமிழ்நாடு தீர்ப்பு: விஜய் ஆட்சி அமைக்கட்டும், கவனிப்போம், 6 மாதங்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. புதிய அரசு தனது அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள் தொடர வேண்டும் என்றும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் கூறினார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *