சென்னை, மே 7- சட்டமன்றத் தேர்தலில், சொந்த ஊருக்கு சென்று வாக்காளர்கள் ஓட்டு போட போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாதது குறித்து, ஆணையம் அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், ஏப்., 23இல் நடந்தது. இந்த தேர்தலில், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற வாக்காளர்கள் பலர், போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்தாததால், ஓட்டு போட முடியவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சவுந்தர், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு, மனுவுக்கு தேர்தல் கமிஷன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
ஓட்டு போட பேருந்து வசதி ஏற்படுத்தாதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
Leave a Comment
