‘பிளஸ் 2’ தேர்வு முடிவு எப்போது?

1 Min Read

‘பிளஸ் 2’ தேர்வு முடிவு எப்போது?

சென்னை, மே 7- ‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகாது’ என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித் துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 8.27 லட்சம் மாணவ –- மாணவியர் தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பின்போதே, தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடிக்கிறது. புதிய அரசு பதவியேற்ற பின், அரசின் அனுமதி பெற்று, தேர்வு முடிவு களை வெளியிட அதிகாரி கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை (8.5.2026) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது.

இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், ‘2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் நடக்கின் றன. அதனால், முடிவுகள் வெளியாகும் நாள் குறித்த விபரம், அதற்கு முதல் நாள் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *