பெருமாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு.பழனியாண்டி மறைவு கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெருமாத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு. பழனியாண்டி (வயது 93) அவர்கள் இன்று (7.5.2026) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

புவனகிரி என்பது நமது இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பகுதியாகும். ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரிகளில் ஒருவராக இருந்த கே. நவசிவாயம், அ.சச்சிதானந்தம் (மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர்) ஆகியவர்களோடு, நமது பழனியாண்டி அவர்கள் இயக்கப் பணியில் முழு மூச்சாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் ஆவார். மறைந்த நிலையிலும் தனது உடலை மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இறுதி மூச்சைத் துறந்த அந்தப் பெரியார் பெருந்தொண்டர் என்றும் நமது நினைவிற்குரியவர் ஆவார்!

அத்தகைய பெருமகனாரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும் குறிப்பாக அவரது மகன் குணசேகரன், மகள் வள்ளி ஆகியோருக்கும்,  கழகத்தினருக்கும் இயக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

 

 சென்னை       

 7.5.2026 

குறிப்பு: சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  பேராசிரியர் பூ.சி. இளங்கோவனிடம் கழகத் தலைவர் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *