‘க்யூட்’ நுழைவுத் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிட்டது தேசியத் தேர்வுகள் முகமை

சென்னை, மே 7 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் (CUET-UG) நுழைவுத் தேர்வு நுழைவுச் சீட்டுகளை தேசிய தேர்வுகள் முகமை (NTA) தற்போது வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இந்த பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாகும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்: மே 11 முதல் மே 31 வரை.விண்ணப்பதாரர்கள்: சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பப் பதிவு: கடந்த ஜனவரி 3 முதல் பிப்ரவரி 26 வரை நடை பெற்றது.

நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்
செய்வது எப்படி?

தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் தேசிய தேர்வுகள் முகமை யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://cuet.nta.nic.in/கூடுதல் தகவல்களுக்கு: www.nta.ac.in

தேர்வு குறித்த ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கூடுதல் விளக்கங்கள் தேவைப்படும் மாணவர்கள் பின்வரும் வழிமுறைகளில் என்டிஏ-வை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது:

தொலைபேசி எண்: 011-40759000 மின்னஞ்சல் முகவரி: [email protected]

மாணவர்கள் முன்னதாகவே நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையம் மற்றும் வழிகாட்டுதல்களைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *