மோடிக்கு அடிபணிந்தாரா விஜய்? ஒன்றிய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் விஜய் ட்விட்டர் பதிவால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை

3 Min Read

சென்னை, மே 06 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் வாயிலாகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாகவும் விஜய்க்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மோடிக்கு விஜய் விடுத்த பதில்

தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், “மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே குறிக்கோள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படத் தயார். இந்த முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மதுரையில் ஹிந்தி சர்ச்சை

இதற்கிடையே, மதுரை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் முஸ்தபா, செய்தியாளர் சந்திப்பின் போது முழுமையாக ஹிந்தியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் வளர்த்த மதுரையில், தமிழ் பேசுவதைத் தவிர்த்து ஹிந்தியில் பேசிய அவரை ‘ஹிந்திவாலா எம்.எல்.ஏ’ என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.ஒன்றிய அரசுடன் இணக்கமான போக்கை விஜய் கடைபிடிப்பதும், அவரது கட்சி வேட்பாளரின் ஹிந்திப் பேச்சும்  தமிழ்நாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி

தேர்தல் ஆணையம் மற்றும் மதவாத அரசியலே காரணம்

உமர் அப்துல்லா காட்டம்

தமிழ்நாடு

கொல்கத்தா, மே 6  மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிக்கு பின்னால் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளும், மதவெறி அரசியலும் இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களுடன் தோல்வியைத் தழுவியது. மற்ற கட்சிகளான காங்கிரஸ் – – 2, ஏஜெயுபி  – 2, மார்க்சிஸ்ட் – 1 மற்றும் ஏஐஎஸ்எஃப் – 1  இடங்களைப் பெற்றுள்ளன.

பாஜகவின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேர்தல் முடிவுகள் நேர்மையான முறையில் அமையவில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் பின்வரும் காரணங்களை அடுக்கியுள்ளார்:

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்: வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை இழந்து செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தகுதி வாய்ந்த வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கியதன் மூலம் பாஜகவின் வெற்றிக்கு ஆணையம் வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.

மதவாத அரசியல்: ஹிந்துத்துவ அமைப்புகள் மூலம் மத உணர்வுகளைத் தூண்டி, குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்பைப் பரப்பியதன் வாயிலாக பாஜக வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள்: சிறு பான்மையினரின் வாக்குகள் திட்டமிட்டு பிளவுபடுத்தப்பட்டதும் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா கூட்டணி வியூகத் தோல்வி

இந்தத் தோல்வியின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் வியூகம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமானதா அல்லது மாநிலத் தேர்தல்களிலும் அது தொடருமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தேர்தல் அரசியலில் இந்தக் கூட்டணியின் உண்மையான பங்கு என்ன என்பதைத் தலைவர்கள் விளக்க வேண்டும்” என உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் இத்தகைய புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *