10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை த.வெ.க. முக்கிய நிர்வாகி கைது

1 Min Read

சென்னை, மே 6- மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த சில நாள்களுக்கு முன் வடசென்னை ஆர்.கே.நகர் தொகுதி காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ‘பாம்பு தினேஷ்’ என்ற தினேஷ், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

மயிலாப்பூரில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, நடந்ததை சித்தியிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், மே 3ஆம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ வழக்கு என்பதால், காசிமேடு காவல் துறையினர் வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். மே 4ஆம் தேதி தினேஷை கைது செய்ய முயன்றபோது, அவர் ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மய்யத்தில் இருந்ததால் கைது செய்ய முடியவில்லை. பின்னர் நேற்று (5.5.52026) இரவு காவல் துறையினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான தினேஷ், 43ஆவது வார்டு தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளராக உள்ளார். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *