பத்தே மாதங்களில் பதவியை இழந்தார் ருமேனியா பிரதமர்

1 Min Read

 

புக்கரெஸ்ட், மே 6- பொருளாதார நெருக் கடியை சீர்செய்ய நட வடிக்கை எடுக்காததால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வென்றதால், ருமேனியா பிரதமர் இலி பொலோஜன் அரசு, 10 மாதங்களில் கவிழ்ந்தது.

அய்ரோப்பிய நாடான ருமேனியா, அய்ரோப்பிய யூனியனில் பெரும் பட்ஜெட் பற்றாக் குறை உள்ள நாடாக உள்ளது. மேலும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில், ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய இடதுசாரி சமூக ஜனநாயக கட்சியும், வலதுசாரி எதிர்க்கட்சியான ரோமானி யர்களின் ஒற்றுமைக்கான கட்சியும் இணைந்து கடந்த வாரம் அந்நாட்டு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானத்தின் மீது நேற்று (5.5.2026) நடந்த விவாதத்தின் போது 281 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 4 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதில் பிரதமரின் லிபரல் கட்சி மற்றும் அதன் மற்ற கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, பிரதமர் பொலோஜனின் அரசு பதவியிழந்தது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் பதவியேற்ற பொலேஜன், 10 மாதங் களில் ஆட்சியை இழந்து உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *