கோவையில் பலமான அ.தி.மு.க. கோட்டை தகர்ந்தது! 10இல் 9 தொகுதிகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி!

கோயம்புத்தூர், மே 5– தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில் அக்கட்சி இம்முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தல்களில் பெற்ற அமோக வெற்றியைத் தக்கவைக்க முடியாமல், 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கூட்டணி பறிகொடுத்துள்ளது.

கோவை மாவட்டம் அதிமுகவின் பலமான தளமாகவே இருந்து வந்துள்ளது.

2016 தேர்தல்: மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியது.

2021 தேர்தல்: அதிமுக கூட்டணி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது.

தற்போதைய தேர்தல்: அதிமுக கூட்டணி வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வேலுமணி மட்டுமே வெற்றி; மற்ற இடங்களில் தவெக, திமுக ஆதிக்கம்

தி.மு.க.: கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத நிலையில், தற்போது தி.மு.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்று கோவையில் மீண்டும் கால்பதித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *