குப்பை மேட்டில் விவிபேட் சீட்டுகள்! ஓடிவந்து விளக்கம் அளித்த மேற்கு வங்க தேர்தல் ஆணையர்

2 Min Read

கொல்கத்தா, மே 5 கொல்கத்தா மேற்கு வங்கத்தின் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்யம் கிராம் பகுதியில், வாக்கு எண்ணிக்கைக்கு ஒருநாள் முன்னதாக, ஞாயிறன்று (3.5.2026) நள்ளிரவு சாலையோரக் குப்பை மேட்டில் ஏராளமான விவிபேட் சீட்டுகள் (வாக்குப்பதிவுக்கான ஒப்புகை சீட்டு) சிதறிக் கிடந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியது.

காவல்துறை விசாரணையில் நோவாபாரா தொகுதியின் 29 ஆவது வாக்குச் சாவடிக்குச் சொந்தமான விவிபேட் சீட்டுகள் இவை எனத் தெரியவந்தது.

இதனால் நோவாபாரா தொகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் புகார் அளிக்கும் முன்னரே, மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதி காரி மனோஜ் குமார் அகர்வால், “கண்டெடுக்கப்பட்ட சீட்டுகள் உண்மையான தேர்தலில் பதி வான வாக்குகள் அல்ல.

அவை தேர்தல் தொடங்கு வதற்கு முன்ன தாக நடத்தப்படும் மாதிரி வாக்குப் பதிவின் போது அச்சடிக்கப்பட்ட சீட்டுகள் ஆகும்.

வாக்குப்பதிவு நாளன்று பதிவான உண்மையான விவி பேட் சீட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தச் சீட்டுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அஜாக்கி ரதையாகக் கையாண்ட அதிகாரிகள்மீது விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்டத் தேர்தல் அதி காரிக்கு ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது” என அவர் மழுப்ப லாக கூறினார்.

சிபிஎம் கண்டனம் தேர்தல் ஆணையத்தின் மழுப்பலான விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளாக இருந் தாலும், அவற்றை விதிகளின்படி பாதுகாப்பாக வைத் திருக்க வேண்டும்.

அவற்றை வீதியில் வீசியது பெரிய பாதுகாப்பு குறைபாடு.

வாக்கு எண்ணிக்கை க்கு முன்பாக இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமையும்” என கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் நோவா போரா தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *