நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுத் தலைவராக கே.சி.வேணுகோபால் மீண்டும் நியமனம்!

1 Min Read

புதுடில்லி, மே 3- அரசாங்கத்தின் செலவினங்களை ஆய்வு செய்வதும், நிதி பொறுப் புடைமையை உறுதி செய்வதும் பொதுக் கணக்குக் குழுவின் முக்கியப் பொறுப்பாகும்.
மேலும், இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் சமர்ப்பிக்கும் அறிக்கை களையும் இந்தக் குழு பரிசீலனை செய்கிறது.
பொதுப் பணம் திறமையாகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங் களுக்கு ஏற்பவும் பயன்படுத்தப் பட்டுள்ளதா என்பதை இது கண்காணிக்கிறது.
இந்தக் குழுவில் மக்களவையைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் இணைந்து மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ளனர்.
2026-2027 ஆண்டுக்கான குழுத் தலைவராக, அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தணிக்கை அறிக்கைகள் மீது நடைபெறும் ஆய்வுகளை கே.சி.வேணுகோபால் வழிநடத்துவார்.
பல்வேறு அமைச்சகங் களில் ஏற்படும் தேவை யற்ற செலவுகள், நிர்வாக குறைபாடுகள், நிதி முறைகேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் விவாதங்கள், விசாரணைகள் மற்றும் கண்டறிதல் நடவடிக்கை களையும் அவர் மேற்பார்வை செய்வார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *