கொத்தடிமை வழக்குகளில் விரைந்து தண்டனை தமிழ்நாடு அரசு, தலைமைக் குற்றவியல் வழக்குரைருக்குப் பாராட்டு பன்னாட்டு நீதி இயக்கம் கடிதம்

2 Min Read

சென்னை, மே 2  கொத்தடிமை வழக்குகளில் தண்டனை பெற்றதில் சிறப்பு சாதனை படைத்ததற்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு பன் னாட்டு நீதி இயக்கம் (ஜஸ்டிஸ் மிஷன்) பாராட்டு தெரி வித்துள்ளது.

கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்காக தமிழ்நாடு  அரசுக்கும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னாவுக்கும் பாராட்டு தெரிவித்து பன் னாட்டு ஜஸ்டிஸ் மிஷன் (பன்னாட்டு நீதி மிஷன்) கடிதம் அனுப்பியுள்ளது.

பன்னாட்டு நீதி மிஷன் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டோருக்காக தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி நடத்தும் ஆய்வரங்குகளில் பன்னாட்டு நீதி மிஷன் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

தமிழ்நாடு அரசுக்கு பன்னாட்டு நிதி மிஷனின் தமிழ்நாடு மாநிலத்தின் அட்வகெசி பிரசிடெண்ட் ரேச்சல் பிரசன்னா, மாநில அரசு தலைமை குற்றவியியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும் குற்ற வழக்கு தொடர்வு இயக்கக வழக்குரைஞர்களுடன் இணைந்து, கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் மட்டும் 12 கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி மற்றும் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோரின் ஊக்கத்துடன் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பை முன்னெடுக்க நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. கொத்தடிமை தடுப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 60 நாட்களுக்குள் வழக்கை முடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அரசு காட்டும் முனைப்பையும், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு முயற்சிகளையும், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை சமூகத்தில் மீளச் சேர்க்கும் பணிகளையும் பாராட்டி அரசு குற்றவியல் வழக் குரைஞர்கள், குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் இம்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைத்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *