கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே 5ஆம் தேதிக்குள் ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு தகவல்

1 Min Read

சென்னை, மே 2- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 183 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரை யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் இவர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் ரூ.30 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் விரிவுரையாளர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் சற்று தாமதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஏப்ரல் மாத ஊதியம் மே 5 தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.18.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இயங்கும் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, ராதா கிருஷ்ணன் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய சுழற்சி – 1 மற்றும் சுழற்சி – 2 கவுரவ விரிவுரையாளர் களுக்கான ஏப்ரல் மாத தொகுப்பூதியம் அளிக்கும் விதமாக ரூ.18.26 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எந்த வித தாமதமுமின்றி மே 5ஆம் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *