அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை!

1 Min Read

சென்னை, மே 2- அய்சிஎஸ்இ மற்றும் அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு நடந்த அய்சிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வில் 3,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,428 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அய்எஸ்சிஇ 12ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 1501 மாணவிகள் தேர்வு எழுதியதில் 1500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 99.9 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களில் 1804 பேர் தேர்வு எழுதியதில் 1802 பேர் தேர்ச்சி பெற்று 99.9 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளனர்.

இதுகுறித்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை சம்யுக்தா கூறும்போது, எங்கள் பள்ளியல் 400 பேர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியதில் 392 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

இதேபோல், அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் மாணவர்கள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *