சென்னை, மே 2- பாஜக & இந்துத்துவா அச்சுறுத்தலை எதிர்த்து போராட வேண்டும் என வைகோ கூறியுள்ளார். இந்த குறிக்கோளுக்காகவே நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம் என்றார். இளைஞர் மத்தியில் இதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர், அதுதான் திராவிடத்தின் தேவை எனவும் பேசியுள்ளார். மேலும், மே.வங்கத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி கடினமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற தாய், மகன்!
சென்னை, மே 2- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும் மகனும் ஒரே நேரத்தில் தேர்ச்சியடைந்த நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. 6ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய லட்சுமிக்கு தற்போது திருமணமாகி விஜய் என்ற மகன் உள்ளார். அவர் 10ஆம் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். மகனுடன் தனித் தேர்வு முறையில் லட்சுமியும் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். லட்சுமி (360/500), விஜய்(562/600) இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
534 பணியிடங்கள்.. விண்ணப்பிக்கலாம்!
சென்னை, மே 2- இந்திய நாணய அச்சகத்தில் 534 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஜூனியர் டெக்னீசியன், சூப்பர்வைசர், ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் கல்வித்தகுதி: அய்டிஅய், டிப்ளமோ, பி.எஸ்சி., பி.இ., வயது: 18-30 தேர்வுமுறை: இணைய வழி. விண்ணப்பக் கட்டணம்: 1,000 விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 19 இதற்கு இந்த <<exhttps://cnpnashik.spmcil.com/hi/>> லிங்க்கில் விண்ணப்பிக்கவும்.
